பார்வையாளர்களுக்கு நல்ல செய்தி.. ஒரு நாளைக்கு 15,000 பேருக்கு அனுமதி..!
கொரோனா வைரஸால்பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 190 நாட்கள் மூடப்பட்ட பின்னர், தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை செப்டம்பர் 21, அன்று சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. உள்துறை அமைச்சக வழிகாட்டுதலின்படி, அதிகபட்சமாக 5,000 சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர், அதே நேரத்தில், ஆக்ரா கோட்டையில் அதிகபட்சமாக 2,500 பேர் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு நினைவுச்சின்னங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகமும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையமும் (ஏ.எஸ்.ஐ) முடிவு செய்தனர். அதன்படி, ஆக்ரா மாவட்ட நிர்வாகம் தாஜ்மஹாலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 15,000 ஆக உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில், ஆக்ரா கோட்டையில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 7,500 சுற்றுலாப் பயணிகளாக உயர்த்தியது.