மாணவர்களுக்கு நற்செய்தி .! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.!
- இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வருகின்ற மார்ச் மாதம் 3 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது. இணையதள முடக்கத்தால் விண்ணப்பிக்க வருகின்ற 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டது.
அதில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வருகின்ற மார்ச் மாதம் 3 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது.
விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 31 -ம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இணையதள முடக்கத்தால் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன் படி வருகின்ற 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.