ரயில்வே பயணிகளுக்கு ஒரு நற்செய்தி…புதிய கிரெடிட் கார்டு வசதி அறிமுகம்.!
ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் எஸ்.பி.ஐ ஆகியவை இணைந்து ரயில்வே பயணிகளுக்காக ஒரு புதிய ரூபே கிரெடிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இது இந்திய ரயில்வே தன்னம்பிக்கை பெற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- அதில், இந்த கார்டை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால் அடிக்கடி பயணிகள் கேஷ்பேக் பெறுவார்கள்.
- இ-காமர்ஸ் வலைதளங்களில் தள்ளுபடி.
- ஐஆர்சிடிசி வலைதளம் மூலமாக பதிவு செய்யப்படும் ஏசி 1, ஏசி 2, ஏசி 3, ரயில் டிக்கெட்டுகளில் 10 % வரை கேஷ்பேக் வழங்கப்படும்.
- ரிவார்ட் புள்ளிகளை வைத்து ஐஆர்சிடிசி இணையதளத்தில் இலவச ரயில் டிக்கெட்டுகளை பெறலாம்.
- 2021 மார்ச் 31 வரை சேர கட்டணம் இல்லை.
- பெட்ரோல் நிலையங்களில் கூடுதல் கட்டணத்தில் 1% தள்ளுபடி வழங்கப்படும்
- உணவுகளை ரயிலில் ஆர்டர் செய்வதற்கு 10% தள்ளுபடி.
- irctc.co.in இல் ஆன்லைனில் உங்கள் கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்யப்பட்ட எந்த ரயில் டிக்கெட்டையும் ரத்து செய்தால், மொத்த பணத்தைத் திரும்பப்பெறும் தொகையில் 1.8% கட்டணம் உங்கள் கார்டில் சேர்க்கப்படும்.
இந்த கார்டை பெற உங்கள் தனிப்பட்ட விவரங்கள், மொபைல் எண், முகவரி, தொழில்முறை விவரங்கள் போன்ற கொடுக்கவேண்டும். கார்டை விண்ணப்பிக்க கீழே உள்ள விண்ணப்பிக்க லீக்கை கிளிக் செய்யவும்.