புதிய வீடு வாங்குபவர்களுக்கு நாட்டின் பிரபல வங்கி SBI, 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
SBI வங்கி வீடு கடன் வட்டி விகிதம் ஏற்கனவே இந்திய வங்கித் துறையில் மிகக் குறைவானதாக உள்ளது. ஆனால், தற்போது வீடு வாங்குபவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அட்டகாசமான சலுகைகளை வழங்கியுள்ளது. அதாவது, 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை வீட்டு கடன்களில் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. சலுகை செயலாக்கக் கட்டணத்தில் 100% தள்ளுபடியும் இதில் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், நுகர்வோர் உணர்வுகளை புதுப்பித்து ஊக்கமளிப்பதில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளது. கடன் வாங்கும் பெண்களுக்கு 5 bps SBI சிறப்பு சலுகை அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த முடிவை குறித்து SBI நிறுவனத்தின் எம்.டி (சில்லறை மற்றும் டிஜிட்டல் வங்கி) சி.எஸ். செட்டி கூறுகையில், வீட்டுக் கடன்களுக்கான SBI-யின் மிகக் குறைந்த வட்டியுடன், வீடு வாங்குபவர்களை நம்பிக்கையுடன் வீடு வாங்கும் முடிவை எடுக்க ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
கொரோனாக்கு பிறகு, நாடு முன்னேறி செல்ல தயாராக இருப்பதால், SBI வீடு வாங்குபவர்களுக்கும், ரியல் எஸ்டேட் துறைக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும். வீடு வாங்க தகுதியுள்ள அனைவரும் யோனோ ஆப் (YONO App) மூலம் டாப்-அப் வீட்டுக் கடனைப் பெறலாம். இந்த புதிய சலுகைகள் மூலம் எங்கள் புதிய ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தர வாழ்த்துகிறோம். கடன் தொகை, கடன் வாங்கியவர்களின் கடன் மதிப்பு மற்றும் சொத்தின் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக வட்டி சலுகையை வங்கி வழங்குகிறது என குறிப்பிட்டுளார்.
மேலும் வாடிக்கையாளர்கள் (YONO App) அல்லது https://homeloans.sbi/ மற்றும் https://www.sbiloansin59minutes.com/home ஆகிய வலைத்தளங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து 5 bps கூடுதல் வட்டி சலுகையைப் பெறலாம்.
(SBI) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவிக்கப்பட்ட சலுகைகள் :
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …