அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! அகவிலைப்படி உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Default Image

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) 3% உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்த மத்திய அரசின் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அகவிலைப்படி 31 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 34 சதவீதமாக உயர்த்துவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயணப்பெறுவர்கள். கடந்த ஆண்டு அக்டோபரில் 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியாக ரூ.18,000 செலுத்தி வந்த நிலையில், தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வின்படி ரூ.24,000 ஆக உயர்த்தப்படும் எனபது குறிப்பிடப்படுகிறது. பணவீக்கத்தால் ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படும் பாதிப்பை ஈடுகட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

01.01.2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்