தேர்வர்களுக்கு நற்செய்தி; வெளியானது UGC NET தேர்வு முடிவுகள்.!
பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு UGC NET 2023 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
வெகு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC NET) தேசிய தகுதித் தேர்வு முடிவுகள், தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது. UGC NET 2023 தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://ugcnet.nta.nic.in இல் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி சரிபார்த்து கொள்ளலாம்.
எப்படிச் சரிபார்ப்பது:
- UGC NET அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் http://ugcnet.nta.nic.in. பார்வையிடவும்.
- முகப்புப் பக்கத்தில், ‘UGC NET டிசம்பர் – 2022 முடிவு’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின் எண்ணை குறிப்பிடவும்.
- அதன்பின் வரும் திரையில் உள்நுழை’ என்பதைக் கிளிக் செய்தால் உங்களது முடிவுகள் திரையில் தோன்றும்.
UGC-NET தேர்வு கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கி மார்ச் 16 வரை ஐந்து கட்டங்களாக இந்தியாவின் 186 நகரங்களில் உள்ள 663 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 8,34,537 தேர்வர்கள் எழுதினர்.