வங்கி ஊழியர்களுக்கு குட்நியூஸ்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு…!
ரிசர்வ் வங்கி (RBI) வங்கியானது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.அதன்படி,முக்கிய பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வங்கிகள் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 10 நாட்கள் முன்அறிவிப்பு இல்லாத கட்டாய விடுப்பு அதாவது ஆச்சரிய விடுப்பு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.அதன்படி,வங்கி ஊழியர்களுக்கு இந்த விடுமுறையைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த புதிய விதியானது,அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். மேலும்,ஊழியர்கள் கட்டாய விடுப்பில் இருக்கும்போது, அவர்களின் பணி பொறுப்புகள் தொடர்பாக வங்கி செயல்பாடுகளுடன் எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனினும், விடுமுறைகளில் செல்லும் ஊழியர்கள் இ-மெயில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இது மோசடியைக் கட்டுப்படுத்த வங்கிகள் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.இந்த உத்தரவை ஆறு மாதங்களுக்குள் அனைத்து வங்கிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 2015 இல் கட்டாய விடுப்பு உத்தரவுகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது.