வங்கி ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – மத்திய அரசு ஒப்புதல்…!
வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குடும்ப ஓய்வூதியத்தை, கடைசியாக பெற்ற சம்பளத்தில் 30 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பைக்கு 2 நாள் பயணம் மேற்கொண்ட,மத்திய நிதியமைச்சர் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,ஸ்மார்ட் வங்கி முறைக்கான சீர்திருத்த கொள்கை ‘ஈஸ் 4.0 (EASE 4.0) திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
“Finance Minister Nirmala Sitharaman launched EASE 4.0 in Mumbai. EASE (Enhanced Access and Service Excellence) is a common reform agenda for Public Sector Banks aimed at institutionalising clean and smart banking,” tweets FM’s Office pic.twitter.com/yCstAqvNYm
— ANI (@ANI) August 25, 2021
இதனையடுத்து,பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.இதன்மூலம்,பொதுத்துறை வங்கி ஊழியர் ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீதத்தினை குடும்ப ஓய்வூதியமாக அவரது குடும்பத்தினர் பெற முடியும்.இதனால்,வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை அவரது குடும்பத்திற்கு கிடைக்கும். மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களின் ஓய்வூதிய நிதிக்கு முதலாளிகளின் பங்களிப்பு தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.
இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவல்களை நிதிச்சேவைகள் துறை செயலாளர் தேபசிங் பாண்டா, மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நேற்று வெளியிட்டார். மத்திய அரசின் குடும்ப ஓய்வூதிய உயர்வு தொடர்பான அறிவிப்பால், ஆயிரக்கணக்கான பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்பங்கள் பயனடையும்.
இதுகுறித்து,இந்தியன் வங்கிகள் சங்கம் (IBA) வெங்கடாசலம் கூறியதாவது: “இந்த தீர்வுத் திட்டத்தின் கீழ், மறுபயன்பாட்டு நன்மைகளை மேம்படுத்துவதில் அக்கறை எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், 2010 க்குப் பிறகு வங்கிகளில் சேர்ந்த இளம் ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதிய முறையில் நிர்வாகத்தின் பங்களிப்பு தற்போதைய 10 சதவீதத்திற்கு பதிலாக 14 சதவீதமாக இருக்கும்.
அதாவது நிதிக்கு வங்கியின் பங்களிப்பு தொகையில் 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும்,மூத்த ஊழியர்களுக்கு, பணிக்கொடை, ஓய்வூதியம், இடமாற்றம் மற்றும் விடுப்பு காப்பீட்டுத் தொகைகள் அதிகரிக்கும்.குறிப்பாக,குடும்ப ஓய்வூதியத்தின் அதிகரிப்பு, சேவையின் போது அல்லது ஓய்வுக்குப் பிறகு தங்கள் அன்புக்குரியவரை இழக்க நேரிடும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு இது பொருந்தும்”,என்று தெரிவித்தார்.