குட்நியூஸ்!மீண்டும் 11 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 392 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,44,683 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 10,929 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1700 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,43,44,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 33 நாட்களில் தினசரி நேர்மறை விகிதம் (1.35%) 2%க்கும் கீழ் குறைந்துள்ளது.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 392 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,60,265 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,509 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,37,37,468 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.23% ஆக அதிகரிப்பு.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.255 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,07,92,19,546 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.