ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை முதல் துவங்கவுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்களில் ஒன்றான ரயில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் ஜூன் 1 முதல், இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் எனவும், கால அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும், விரைவில் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது. இந்த ரயிலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு ரயில் சேவை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…