கேரள லாட்டரி மூலம் புதுச்சேரியை சேர்ந்த பக்தருக்கு ரூ.20 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கலில், எக்ஸ் சி 224091 என்ற லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு விழுந்தது.
சபரிமலை யாத்திரையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் இருந்த வந்த புதுச்சேரியைச் சேர்ந்த 33 வயதான தொழிலதிபர், கேரளாவின் இரண்டாவது மிக உயர்ந்த லாட்டரி பரிசான ரூ.20 கோடி கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பரை பரிசை வென்றுள்ளார்.
பத்மநாப ஸ்வாமி கோவிலின் கிழக்கு நாடா லட்சுமி சென்டரில் உள்ள துணை ஏஜென்டிடம் வெற்றி பெற்ற டிக்கெட்டு உட்பட டிக்கெட்டுகளை வாங்கியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பரிசு பெற்ற டிக்கெட்டை தேவையான ஆவணங்களுடன் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குனரகத்தில் ஒப்படைக்கும் போது, தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர், அந்த நபர் தனது பெயரையோ அல்லது முகவரியையோ ஊடகங்களுக்கு தெரிவிக்கவும் மறுத்துவிட்டார். ஆனால், சபரிமலை ஐயப்பன் தரிசனத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரம் வந்தபோது, இந்த லாட்டரி சீட்டை வாங்கியதாக அவர் தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு.. பாஜக எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் என்பது திருவோணம் பம்பருக்குப் பிறகு இரண்டாவது அதிக பரிசுத் தொகை கொண்ட லாட்டரி சீட்டு ஆகும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் முதல் பரிசாக ரூ.20 கோடியும், இரண்டாம் பரிசாக தலா ரூ.1 கோடியும் 20 பேருக்கு வழங்கப்பட்டது. முதல் பரிசை வெல்பவருக்கு வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன் கழித்த பிறகு சுமார் ரூ.12 கோடி கிடைக்கும்
துபாய் : பிரிட்டனைச் சேர்ந்த மார்கஸ் ஃபகானா என்கிற 18 வயதுடைய சிறுவன், பள்ளி விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு…
துபாய் : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ளது. முன்னதாக ஐபிஎல்…
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…