பொற்கோயில்: கால்கள் தெரியும்படி பாவாடை அணிந்ததால், சிறுமிக்கு அனுமதி மறுப்பு; காவலர் விளக்கம்.!
கால்கள் தெரியும்படி பாவாடை அணிந்ததால், பொற்கோயிலுக்குள் சிறுமி அனுமதிக்கப்படவில்லை என காவலர் தற்போது கூறியுள்ளார்.
அனுமதி மறுப்பு:
முகத்தில் மூவர்ணக் கொடியை வரைந்ததற்காக சிறுமிக்கு பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமிக்கு அனுமதி மறுத்த பாதுகாவலர் தற்போது அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். சிறுமி, பாவாடை(ஸ்கர்ட்) அணிந்திருந்ததாலும், கால்களை மறைக்காததாலும் சீக்கியர் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததாகக் கூறியுள்ளார்.
விளக்கம்:
முகத்தில் மூவர்ணக் கொடி பூசப்பட்டதால் பொற்கோயிலுக்குள் நுழைய சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்ட வீடியோ வெளியான ஒரு நாள் கழித்து, காவலாளி, அவள் பாவாடை அணிந்திருந்ததால், அவளது கால்கள் தெரியும்படி இருந்ததால், சிறுமிக்கு அனுமதி மறுத்ததாகக் கூறினார்.
மன்னிப்பு:
இந்தியாவில் உள்ள சீக்கிய ஆலயங்களை நிர்வகிக்கும் ஆணையமான ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியும் (எஸ்ஜிபிசி) இந்த விவாகரத்திற்கு மன்னிப்புக் கோரியது. முன்னதாக பொற்கோயில் பணியாளர் அந்த சிறுமியிடம், பொற்கோயிலின் நடத்தை விதிமுறைகள் (‘மர்யாதா’) பற்றி கூறினார்.
விதிமுறைகள்:
பொற்கோயிலின் விதிமுறைகள் படி, முழுவதுமாக அவளது உடலை மறைக்குமாறு அவர் கூறியுள்ளார். இந்த சர்ச்சைக்கு பதிலளித்த எஸ்ஜிபிசியின் பொதுச் செயலாளர் குர்சரண் சிங் கிரேவால், பக்தர்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லை. எந்தப் பகுதி, சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் பொற்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரவேற்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
சிறுமி தவறான நடத்தையை எதிர்கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும், மேலும் அந்த சிறுமியின் முகத்தில் இருந்த மூவர்ணக்கொடியில், நடுவில் அசோக சக்கரம் இல்லாததால் அது நம் தேசியக் கொடி அல்ல என்றும் அவர் கூறினார்.