SBI-யில் அதிகாரியாகும் பொன்னான வாய்ப்பு..! இதோ முழு விபரம்..!
SBI-யில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.
பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு துறைகளில் துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் வட்ட பாதுகாப்பு வங்கி ஆலோசகர், சிறப்பு கேடர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் 13 -ஆம் தேதி எஸ்பிஐ வெளியிட்டது.
இந்தப் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.
காலியிட விவரங்கள்:
10 துணை மேலாளர் பணியிடங்கள், 6 ரிலேஷன் மேனேஜர், 2 தயாரிப்பு மேலாளர், 50 உதவி மேலாளர், ஒரு வட்ட பாதுகாப்பு வங்கி ஆலோசகர் பணியிடங்கள் என மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படள்ளது.
உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30, துணை மேலாளர் மற்றும் ரிலேஷன் மேலாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்களின் வயது 25 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வட்ட பாதுகாப்பு வங்கி ஆலோசகருக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 60 வயது இருக்க வேண்டும். வயது வரம்பு பற்றிய முழுமையான தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ பார்க்கவும்.
எழுத்துத் தேர்வு இருக்கும் உதவி மேலாளர்களைத் தவிர, மற்ற அனைத்துப் பதவிகளுக்கும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.