அயோத்தியில் உள்ள தங்க மாளிகை பற்றி தெரியுமா.? ராமர் – சீதாவுக்கு கிடைத்த திருமண பரிசு.! 

Mata Sita's Golden Palace Residence in Ayodhya

அயோத்தியில் புதியதாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகமாக தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு குழந்தை ராமர் சிலை தற்போது பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. சிலை நிறுவும் பூஜைகளை பிரதமர் மோடி மேற்கொண்டார்.

ராமர் கோயில் நிறுவப்பட்டுள்ள அயோத்தியில் தங்க மாளிகை ஒன்று உள்ளது. அது சீதா தேவிக்கென தனி கோயிலாக இந்த  கனக் பவன் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு ராமர் மற்றும் சீதாவிற்கு அளிக்கப்பட்ட திருமண பரிசு தற்போது புனித தலமாக விளங்குகிறது. சோனே-கா- மந்திர் அல்லது சோன் – கா – கர் என்றும் இந்த புனித தலம் அழைக்கப்படுகிறது.

வரலாற்று நிகழ்வு.! திறக்கப்பட்ட ராமர் சிலை.! பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.!

தேவி சீதா மற்றும் ராமர் ஆகியோரின் தனிப்பட்ட அரண்மனையாக கனக் பவன் கருதப்படுகிறது. அயோத்தியில் உள்ள மிகச்சிறந்த மற்றும் பிரபலமான கோயில்களில் இந்த தங்க மாளிகையும் ஒன்றாகும். இந்த பவன் சீதா தேவிக்கு ராமருடன் திருமணமான உடனேயே ராமரின் மாற்றாந்தாய் கைகேயி அளித்த திருமணப் பரிசாக நம்பப்படுகிறது.

இந்த ஆலயம் ஒரு திறந்த உள்பகுதியை கொண்டுள்ளது. கர்ப்பகிரகத்தில் வெள்ளிக் கூரையின் கீழ் தங்கக் கிரீடங்கள் அணிந்த ராமர் மற்றும் சீதா தேவியின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. இந்த கோயில் மீது சூரியனின் கதிர்கள் காலையில் விழும்போதும் , மாலை அஸ்தமன நேரத்திலும் கோவில் தங்க மாளிகை போல அற்புதமானதாக காட்சியளிக்கிறது.

கோவிலாக இதனை பார்த்து தரிசிக்க வருபவர்களை விட, தங்க அரண்மனையாக கருதி கனக் பவன் கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம்.  இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் அமைந்துள்ள அற்புதமான அரண்மனைகளை போலவே இந்த தங்க அரண்மனையும் கட்டமைக்கப்பட்டுள்ளது.  தங்க அரண்மனையான கனக் பவன் தலமானது, ராமர் கோயிலுக்கு வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில், தற்போது வரை ஸ்ரீ விருஷ்பன் தர்ம சேது அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்