ஸ்வீட்டிலும் தங்கமா?? அசத்தும் பிரபல ஸ்வீட் கடை!

சூரத்தில் உள்ள பிரபல ஸ்வீட் கடை ஒன்றில் புதிதாய் “தங்க ஸ்வீட்” அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பண்டிகைக்காலம் தொடங்கியுள்ளதால், உடைகள், இனிப்புகள் உள்ளிட்டவைகளின் விற்பனை அனல்பறக்கத் தொடங்கியுள்ளது. மேலும், மக்களை கவரும் வகையில் புதிய பல ஸ்வீட், கார வகைகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில், குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் ஒரு ஸ்வீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்பொழுது தங்கம் விற்கும் விலைக்கு வங்கியில் லோன் வாங்கித்தான் வாங்க வேண்டும். இதனால் நடுத்தர மக்கள் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியை சுரத்தை சேர்ந்த ஒரு ஸ்வீட் கடை செய்துள்ளது. அது, 24 கேரட் தங்கத்தால் ஆன ஸ்வீட். அதன் விலை என்ன தெரியுமா?? ரூ.9,000.
அந்த ஸ்வீட்டின் விலையையும் பாராமல், மக்கள் பலர் இதனை ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர். இந்த ஸ்வீட், தங்கத்தை மெல்லிய இழைகளாக மாற்றி தயாரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், இந்த தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வீட், ரூ.9,000 என்றும், தங்கம் பயன்படுத்தப்படாத இந்த இனிப்பு வகைகளுக்கு ரூ.600- ரூ.800 வரை விற்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த தங்க ஸ்வீட் உடல்நலத்திற்கு நல்லது எனவும், தொடக்கத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்ததாக கூறிய அவர், தற்போது இதை வாங்குவதற்கு பல இடங்களில் இருந்து மக்கள் ஆர்வம் காட்டிவருவதாகவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024