#தங்கக்கடத்தல்_ நாட்டுக்கு சதி!தீவிரவாதிகளின் தொடர்பு??அம்பலம்!!
கேரளாவில் பெரும் பரபரப்பையும் அடுத்தடுத்து அதிர்வலைகளை தங்கக் கடத்தில் வழக்கின் குற்றவாளிகளான ஸ்வப்னா என்ற மும்தாஜ் உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதாரத்தினை சீர்குலைக்கும் சதியில்; பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளித்து வந்ததை என, என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து அம்பலப்படுத்தியுள்ளது.
கேரளாவில் முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள யு.ஏ.இ எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தியது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தூதரகத்தில் முன் பணியாற்றிய ஸ்வப்னாசுரேஷ் என்ற மும்தாஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதில் சம்பந்தப்பட்ட மும்தாஜ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ காவலில் எடுத்து தற்போது விசாரித்து வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களை 24ம் தேதி வரை விசாரிக்க, என்.ஐ.ஏவுக்கு கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இவ்வழக்கின் விசாரணை குறித்து என்.ஐ.ஏ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஸ்வப்னா என்ற மும்தாஜ் உள்ளிட்டோர் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, தங்கக் கடத்தலில் ஈடுபட்டனர். மேலும், அதில் கிடைத்த பணத்தை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்ததாகவும் யு.ஏ.இ., தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். இது அந்நாட்டுடனான நம் உறவில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்து உள்ளது.மொத்தத்தில், நாட்டின் நலனுக்கு எதிராக இவர்கள் செயல்பட்டு உள்ளனர்.என்று அதில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு அதற்கான தக்க ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.