தங்க கடத்தல் விவகாரம் எதிரொலி.! கேரள முதல்வர் பதவி விலக நம்பிக்கையில்லா தீர்மானம்.!?

Default Image

30 தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அண்மையில் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ளவர்கள் உடன் முதல்வர் அலுவலகம் சம்பந்தம் உள்ளதாக கூறி, இதனால் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அவர் பதவி விலக கேரள சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

மேலும், சபாநாயகர் ஸ்ரீராம கிருஷ்ணன் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என யு.டி.எஃப் குழு தலைவர் பென்னி பெஹான் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸை சேர்ந்த சென்னிதலா முன்னெடுக்க உள்ளாராம். குற்றவாளிகளை அரசு காப்பாற்ற நினைக்கிறது எனவும் பென்னி பெஹான் குற்றம் சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்