#BREAKING: தங்கக் கடத்தல்…ஜாமீனில் ஸ்வப்னா சுரேஷ்..!
தங்கக் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், சுங்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவர் சந்தீப் நாயரின் ஜாமீன் மனுவும் இன்று நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படுகிறது. என்ஐஏ வழக்கில் ஜாமீன் வழங்கப்படத்தால் சிறையில் இருந்து ஸ்வப்னா சுரேஷு வெளியே வர முடியவில்லை.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக , அமலாக்கத்துறை , சுங்கத்துறை மற்றும் என்ஐஏ தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது.