கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கு.. தலைமறைவாகிய ஸ்வப்னா முன்ஜாமீன் கோரி மனு!

Published by
Surya

கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ், கேரளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. எனவே தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள  பார்சல்களை ஆய்வு செய்த போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் இருந்துள்ளது.

இந்த கடத்தல் வழக்கில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, தூதரகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய சரித் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தலைமறைவான ஸ்வப்னா, கேரள அரசின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கும் செயலர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டது.

இதன்காரணமாக, எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், இந்த கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ், கேரளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நேரடியாகவோ, மறைமுகவாகவோ இந்த தங்கக்கடத்தலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

85 பேர் பலி.! பதைபதைக்க வைக்கும் தென் கொரியா விமான விபத்து காட்சிகள்…

85 பேர் பலி.! பதைபதைக்க வைக்கும் தென் கொரியா விமான விபத்து காட்சிகள்…

முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…

14 minutes ago

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

13 hours ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

14 hours ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

15 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

15 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

16 hours ago