பொய் பாலியல் புகாரில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா தற்பொழுது மீண்டும் கைது செய்யப்பட்டு காணொளி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர் தான் சொப்னா. இவர் அமீரகத் பணியில் சேர்வதற்கு முன்பாக ஏர் இந்தியாவின் சாட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்பொழுது அந்த நிறுவனத்தில் ஊழல் நடப்பதாக ஷிபு என்பவர் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் செய்திருந்தார். இதனையடுத்து ஷிபுவுக்கு எதிராக சாட்சி நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அங்கு பணிபுரிந்த மற்ற இளம் பெண்களும் சாட்சிக் கையெழுத்துப் போட்டு இருந்தனர். இதுகுறித்து திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் இந்த பாலியல் புகார் பொய் புகார் எனவும், இதன் பின்னணியில் சொப்னா தான் செயல்பட்டு இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் விசாரணையை தொடங்கிய போலீசார் சொப்னா தான் குற்றவாளி என்பதை கண்டறிந்து திருவனந்தபுரம் சிறைக்கு சென்று சொப்னாவை கைது செய்துள்ளனர். பின் காணொளி மூலமாக திருவனந்தபுரம் குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன்பதாக ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் அவரை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வருகிற 22-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…