பொய் பாலியல் புகாரில் தங்கக் கடத்தல் ராணி சொப்னா மீண்டும் கைது!

Default Image

பொய் பாலியல் புகாரில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா தற்பொழுது மீண்டும் கைது செய்யப்பட்டு காணொளி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியதற்காக  கைது செய்யப்பட்டவர் தான் சொப்னா. இவர் அமீரகத் பணியில் சேர்வதற்கு முன்பாக ஏர் இந்தியாவின் சாட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்பொழுது அந்த நிறுவனத்தில் ஊழல் நடப்பதாக ஷிபு என்பவர் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் செய்திருந்தார். இதனையடுத்து ஷிபுவுக்கு எதிராக சாட்சி நிறுவனத்தில் பணிபுரிந்த இளம் பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அங்கு பணிபுரிந்த மற்ற இளம் பெண்களும் சாட்சிக் கையெழுத்துப் போட்டு இருந்தனர். இதுகுறித்து திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் இந்த பாலியல் புகார் பொய் புகார் எனவும், இதன் பின்னணியில் சொப்னா தான் செயல்பட்டு இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் விசாரணையை தொடங்கிய போலீசார் சொப்னா தான் குற்றவாளி என்பதை கண்டறிந்து திருவனந்தபுரம் சிறைக்கு சென்று சொப்னாவை கைது செய்துள்ளனர். பின் காணொளி மூலமாக திருவனந்தபுரம் குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன்பதாக ஆஜர் படுத்தியுள்ளனர். மேலும் அவரை பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வருகிற 22-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்