NIA_கெடுபிடியில் போட்டுடைத்த சிவசங்கர்IAS! பூதாகரமாக வெடிக்கும் தங்க_கடத்தல்!

Default Image

தங்க கடத்தல் விவகாரம் குறித்து தங்கக்கடத்தல் பார்சலின் ரகசிய வார்த்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர்  வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து என்ஐஏ,  சுங்கத்துறை, அமலாக்கத் துறை என்று பல பிரிவு  அதிகாரிகள் தனித்தனியே அதிதீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

அனைத்து பிரிவுகளும் சல்லடை போட்டு கொண்டு விசாரிப்பதிலேயே விவகாரம் விஸ்வரூப அளவில் பெரிதாக இருக்கும் என்று தெரிகிறது.

தங்க கடத்தல் கும்பல்கள்  மற்றும் கடத்தல்காரர்களோடு தொடர்புடையவர்கள் என்று எல்லோரையும் பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன்ர்.

இந்நிலையில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சிவசங்கரன் ஐஏஎஸ் அதிகாரியை என்ஐஏ, சுங்கத்துறை, மற்றும் அமலாக்கத்துறை என்று தனித்தனியே  விசாரணை நடத்தினர்.

இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிவசங்கர் தனது வாக்குமூலத்தில் தங்கக் கடத்தல் பற்றிய பல ரகசியங்கள் கூறியதாக தெரிகிறது.அதில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தங்கம் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட டிப்ளமேட்டிக் பார்சலுக்கு தங்க கடத்தல் கும்பல் ஒரு தனிப் பெயர் வைக்கும் என்று சிவசங்கரன் IAS தெரிவித்தாக கூறப்படுகிறது.

அந்தப் பெயர்தான் தங்கம் அடங்கிய பார்சலுக்கான அடையாளமாகும் இதை வைத்தே தங்கக் கடத்தல் பல ஆண்டுகளாக அரங்கேறியது தெரியவந்துள்ளது.

தங்கம் அடங்கிய பார்சலுக்கு “CONSUL IS EATING MANGOES” என்று பெயர் வைக்கப்படும், இந்த பெயர் ஸ்வப்னா சுரேஷ் என்கிற மும்தாஜ் மூலம் தான் எனக்குத் தெரியும் என்று  சிவசங்கரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

டிப்ளமாட்டிக் பார்சல் மூலம் சுவப்னா சுரேஷ் என்கிற மும்தாஜ் தங்கம் மட்டுமின்றி பல பொருட்களை அமீரகத்தின் மூலம் கேரளாவிற்கு கடத்தி கள்ளச்சந்தையில் விற்று பணம் சம்பத்திதுள்ளதாக  சிவசங்கரன்IAS  விசாரணையில் போட்டுடைத்துள்ளார்.

மேலும் பல ரகசிய தகவல்களையும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்