தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் கைது செய்யப்பட்டார்.
கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், சுங்கத்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவர், முன்ஜாமீன் கோரி கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதற்கு முன் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவரை வரும் 28-ம் தேதி வரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அந்த ஜாமீன் மனுவின் விசாரணை, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அந்த மனு விசாரணையின்போது, சிவசங்கரனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை சார்பில் வாதாடப்பட்டது. இந்தநிலையில், சிவசங்கரனின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை கைது செய்தனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…