#BREAKING: தங்கக் கடத்தல் வழக்கு.. மேலும் 2 பேர் கைது கைது.. சுங்கத்துறை அதிரடி.!

Default Image

இந்த தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள்.

கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் முக்கிய  குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை 9 நாள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடரபாக விசாரணை நடத்தி வருகிறது. பார்சலை வாங்க வரும்போது தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமாரை அதிரடியாக சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர்,  ரமேஷ் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து, ரமேஷ் என்பவரிடம் விசாரணை நடத்திய நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் எர்ணாகுளம் ஜலால், மலப்புரம் முகமது ஷபி, கொண்டோட்டி ஹம்ஜத் ஆகியோரை கொச்சியில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ந்து அதிரடியாக  கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று மலப்புரத்தைச் சேர்ந்த முகமது அன்வர், சையது ஆலவி ஆகிய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த தங்கக்கடத்தல் வழக்கில் சுங்கத்துறை  இதுவரை 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்