கேரளாவின் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி 30 கிலோ தங்கத்தை சுங்க துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தங்க கடத்தல் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.பின்னர், அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது, சிவசங்கர் முன் ஜாமீன் கோரியுள்ளார். அவரது மனு வருகிற 23-ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதுவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தால் 10 பேருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கப்பட்டது.
3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுங்கத்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…