சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக சேமிக்கப்பட்டுள்ள தங்க நகைகளை கொண்டு, ரிசர்வ் வங்கியில் தங்க நகை கடன் பெறலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாம்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இந்திய முழுவதும் பல்வேறு பிரபல புண்ணிய ஸ்தலங்களில் பக்தர்களின் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டன. இதனால் பல்வேறு பிரபல கோவில்களில் அங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோவில் நிர்வாகம் திணறி வருகிறதாம்.
இதனை கருத்தில் கொண்டு, கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஓர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, முக்கிய கோவில்களில் உள்ள தங்க ஆபரண நகைகளை வைத்து ரிசர்வ் பேங்க்கில் தங்க நகை கடன் பெற்று அதன் மூலம் அலுவல் பணிகளை மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளதாம்.
இதன்படி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக சேமிக்கப்பட்டுள்ள தங்க நகைகளை கொண்டு, ரிசர்வ் வங்கியில் தங்க நகை கடன் பெறலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாம்.
ஏற்கனவே கேரள, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவிலில் ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி இருந்து வந்ததால், அதனை சமாளிக்க அக்கோவிலில் உள்ள பயன்படுத்தப்படாத விளக்குகள், பாரம்பரிய பித்தளை பாத்திரங்களை விற்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டின் கீழ் கேர்ளாவில் சுமார் 1200 கோவில்கள் உள்ளன.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…