உலக முழுவதும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்படும் என்று நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர், வரும் விநாயகர் சதுர்த்தியன்று அதை முறையாக அறிமுகம் செய்ய இருக்கிறார். விக்கி பீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். மேலும், தினம் நடக்கும் சத்சங்கம், போட்டோ ஷூட் என ஒன்று விடாமல் எல்லாம் அதிலே இருக்கும் வகையில் நித்தியானந்தாபீடியா வெளியானது.
இந்நிலையில், இந்த பரபரப்புக்கு இடையே இப்போது தனது கைலாசா நாட்டின் கரன்சியை பற்றி பேசியிருக்கிறார். அதில், கைலாசா நாட்டின் கரன்சி காஸ்ட்லியானது என்றும் முழுக்கவே பொற்காசுகள், ஆங்கிலத்தில் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார். இந்து மதத்தை பின்பற்றும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என கூறியுள்ளார். அதுவும், அதிலும் உள்நாட்டுக்கு ஒரு கரன்சி, வெளிநாட்டுக்கு மற்றொரு வகை கரன்சியாம். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்திக்கு ஆண்டு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…