விவசாயிகளின் போராட்ட களத்தில் இலவசமாக ‘பானி பூரி’ அரை மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்தது.!

Default Image

ஹரியானா: சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகளின் போராட்ட இடத்தில் தீயணைப்பு வீரர்கள் இலவசமாக ‘பானி பூரி’ விநியோகிக்கத் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் முடிந்தது. 

விவசாயிகளின் போராட்ட இடத்தில் ‘பானி பூரி’ விற்கும் ஒரு கடைக்கு அருகில் பானி பூரி வாங்குவதற்கு பணம் இல்லை என்று சிறுவன் கூறினான். இதனை, அடுத்து என்ன நடந்தது என்பது குழந்தையையும் வண்டி அருகிலுள்ள உள்ள விவசாயிகளையும் வியப்பில் ஆழ்த்தியது.

அங்கு வந்த 7 தீயணைப்பு வீரர்கள், “நாங்கள் அனைவரும் எங்கள் கிராமங்களில் விவசாய நிலங்களை வைத்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் விவசாயிகள்” என்று ஒரு தீயணைப்பு வீரர் கூறினார்.

ரானியா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த கம்போஜ் மற்றும் அவரது நண்பர்கள் விற்பனையாளரின் முழுப் பானி பூரியை வாங்கி அந்த இடத்திலேயே விற்க தொடங்கினர். அதுவும் இலவசமாக விற்றதால் அரை மணி நேரத்திற்குள் பானி பூரி விற்பனை முடிந்தது.

பானி பூரி விற்பனையாளரான முகமது சலீமுக்கு இது ஒரு கிறிஸ்துமஸ் அதிசயம், கம்போஜ் தனக்கு ரூ .1,000 கொடுத்தார், இது அவர் எதிர்பார்த்ததை விட அதிகம் என்று கூறினார். இதற்கிடையில், அவர் கடந்த மூன்று நாட்களில் வெறும் ரூ .500 சம்பாதித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்