ஒலியை விட 6 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.!

Default Image

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நேற்று ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.  அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த நாடுகளில்  பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை:

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மணிக்கு 3,800 மைல்கள் அல்லது மணிக்கு 6,115 கிமீ வேகத்தில் பயணிக்கின்றன. இது மற்ற பாலிஸ்டிக் மற்றும் பயண ஏவுகணைகளை விட மிக வேகமாக செல்கிறது.

எச்.எஸ்.டி.டி.வி என்பது ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் ஆளில்லா ஸ்க்ராம்ஜெட் எஞ்சின் கொண்ட ராக்கெட் ஆகும். ஹைப்பர்சோனிக் விமானம் என்பது ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு அதிகமாகும்.

பாலிஸ்டிக் ஏவுகணை:

பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறைந்தபட்சம் 5,500 கி.மீ தூரத்தைக் கொண்டுள்ளன. அதிகபட்ச வரம்புகள் 7,000 முதல் 16,000 கி.மீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இந்தியா மற்றும் வட கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன.

2018 ஆம் ஆண்டு அப்துல்கலாம் தீவில் இருந்து 5,000 கி.மீ தூரத்திம் பயணிக்கும் அக்னி-வி அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்