கடவுளின் சூப்பர் கம்யூட்டர் தான் கொரோனா வைரஸை உலகிற்கு அனுப்பியுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் அமைச்சர் சந்திர மோகன் படோவரி, கொரோனாவால் கணவனை இழந்த விதவைகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸை கடவுளின் சூப்பர் கம்ப்யூட்டர் அனுப்பியுள்ளது. இந்த தொற்றுநோய் மனிதனால் உருவாக்கப்படவில்லை.
எனவே கொரோனா தோற்றால் யார் பாதிக்கப்படுவார்கள்?, யார் பாதிக்கப்பட மாட்டார்கள்?, யார் பூமியில் இருந்து எடுத்து செல்லப்படுவார்கள்? என்பதை இயற்கை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இரண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் WHO போன்ற ஒரு பெரிய அமைப்பு ஏன் தொற்று நோயை தடுக்க மருத்துவத்தை கண்டுபிடிக்க தவறிவிட்டது. டிப்டாப் விரிவுரைகளை வழங்கும் விஞ்ஞானிகள் எங்கே? கொரோனாவில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஒரு மருந்தை கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் தோல்வி அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…