கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்தது! நீரில் மூழ்கிய 33 பேரை மீட்கும் பணி தீவிரம்!
ஆந்திர மாநிலம் தேவிபட்டினத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் 60 பேர் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது அவர்கள் சென்றுள்ள சுற்றுலா படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் பயணித்த 60 பேரும் நீரில் மூழ்கினர். இதில் 27 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். மீதம் உள்ள 33 பேரை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியினை பரபரப்பாக்கி உள்ளது.