#GoBackModi உலக அளவில் நம்பர்-1 ட்ரேண்டிங் அது ஒருபுறம் ஒகே…!மறுபுறம் தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி உண்ணாவிரதம்..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடக்கிய எதிர்க்கட்சிகளைக் கண்டித்து பா.ஜ.க. எம்.பி.க்கள், நாடு முழுவதும் தங்களது தொகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் 5-ம் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அலுவல் கூட்டம் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 20-க்கும் நாட்களுக்கும் மேலாக முடங்கியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர எம்,பி.க்களும், நாடாளுமன்றத்தை முடக்கினர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் பா.ஜ.க. எம்,பி.க்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி தனது அலுவல் பணிகளை மேற்கொண்டவாறே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் அலுவல் பணிகளை மேற்கொண்டபடி உண்ணாவிரதப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.