பாலியல் வழக்கிலிருந்து பத்திரிக்கையாளர் தருண் தேஜ்பால் விடுதலை – கோவா நீதிமன்றம் உத்தரவு..!

சக பெண் ஊழியரை பாலியல் செய்ததாக கூறிய வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் இன்று விடுதலை ஆகியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டில் கோவா கருத்தரங்கில் பங்கேற்ற தருண் தேஜ்பால் அங்கிருந்த நட்சத்திர ஓட்டலில் தன்னுடன் இருந்த சக பெண் ஊழியரை லிப்டில் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவர் மீது அந்த பெண் வழக்கு தொடந்தார்.
இதனால் இவர் மீது கோவா போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 341, 342, 354, 354-A , 354-B, 376(2)(f), 376(2) இந்த பிரிவின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் காரணத்தினால் அவர் அந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதன் பிறகு தருண் தேஜ்பால், அவர் மீது வைக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆனால் மும்பை நீதிமன்றம் அவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கோவா நீதி மன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. அந்த வகையில் இந்த வழக்கு கோவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது.
இதில் கடந்த புதன்கிழமை விசாரணை நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு தேதியை வெள்ளிக்கிழமை அன்று ஒத்தி வைத்தார் கோவா மாவட்ட நீதிபதி க்ஷமா ஜோஷி. கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தருண் தேஜ்பால் குற்றவாளி இல்லை என்று கோவா நீதிமன்ற நீதிபதி க்ஷமா ஜோஷி உத்தரவிட்டுள்ளார்.
இதைப்பற்றி தருண் தேஜ்பால், தன் மீது தொடர்ந்த பொய்யான வழக்கிற்கு நீதிமன்றம் இப்போது நான் நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது. நியாத்தை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கும் உண்மையின் பக்கம் நின்ற நீதிபதிக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025