கொரோனா காரணமாக கோவாவில் உள்ள ஜிம், கேசினோ, நீச்சல் குளங்கள், தியேட்டர்கள், பப்கள், கிளப்புகள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வரும் மார்ச் 31 வரை மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். கோவாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்பட்டு ரத்த மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இது தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாநிலமாக கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அதை பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், திரையரங்குகள் என மக்கள் கூட்டமாக சேரும் இடங்களை மூடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…