கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடம்!! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை !!
- கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார்.
- மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மனோகர் பாரிக்கர் 2017 மார்ச் 14-ஆம் தேதி முதல் கோவா மாநில முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார்.அவரால் முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா சென்றார். அங்கு இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர் ஜூன் மாதம் நாடு திரும்பினார். மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற பாரிக்கர், சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்.
பின்னர் டெல்லி மற்றும் மும்பை என சிகிச்சை பெற்று வந்தார்.இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
Chief Minister @manoharparrikar's health condition is extremely critical. Doctors are trying their best.
— CMO Goa (@goacm) March 17, 2019
இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கோவா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.