இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கோவா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனோகர் பாரிக்கர் 2017 மார்ச் 14-ஆம் தேதி முதல் கோவா மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 63) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார்.அவரால் முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா சென்றார். அங்கு இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர் ஜூன் மாதம் நாடு திரும்பினார். மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற பாரிக்கர், சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்.
பின்னர் டெல்லி மற்றும் மும்பை என சிகிச்சை பெற்று வந்தார்.இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என்று குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…