கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (வயது 62) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருகிறார்.அவரால் முதல்வர் பணிகளையும் கவனிக்க முடியவில்லை.
கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா சென்றார். அங்கு இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர் ஜூன் மாதம் நாடு திரும்பினார். மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற பாரிக்கர், சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களுக்கு முன் நாடு திரும்பினார்.
இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் மீண்டும் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. உடனடியாக வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் பிரமோத் கார்க் தலைமையிலான மருத்துவ குழுவினர், பாரிக்கரின் உடல்நிலையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்நிலையில் கோவா முதல்வர் பதவியை பாரிக்கர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
DINASUVADU
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…