ஆகஸ்ட் 31ம் தேதி வரை திட்டமிடப்பட்ட கோ பர்ஸ்ட் விமானங்கள் ரத்து.!
செயல்பாட்டுக் காரணங்களால், ஆகஸ்ட் 31ம் தேதி வரை திட்டமிடப்பட்ட கோ பர்ஸ்ட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், “ஆகஸ்ட் 31 வரை விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.”
“விமானம் ரத்துசெய்யப்பட்டதால் உங்கள் பயணத் திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.