தமிழ்நாடு

ஞானவாபி மசூதி: தொல்லியல் ஆய்வுக்கு அனுமதி.. உச்சநீதிமன்றத்தை நாடும் இஸ்லாமிய தரப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

த்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி, மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்க கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது.

அதன்படி, இஸ்லாமிய அமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், சில நிபந்தனைகளின் கீழ் ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு இந்து தரப்புக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. நீதியை நிலைநாட்ட மசூதியை ஆய்வு செய்வது அவசியம் என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என இந்து தரப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் (ஏஐஎம்பிஎல்பி) உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹாலி கூறுகையில், இந்த மசூதி சுமார் 600 ஆண்டுகள் பழமையானது மற்றும் கடந்த 600 ஆண்டுகளாக முஸ்லிம்கள் அங்கு தொழுகை நடத்தி வருவதால் நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழிபாட்டு தலங்கள் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து முஸ்லிம் தரப்பு முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார். ஏஎஸ்ஐ ஆய்வுக்கு அனுமதி அளித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பதிலளித்த உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். ஏஎஸ்ஐ கணக்கெடுப்பு மற்றும் ஞானவாபி விவகாரம் முடிந்த பிறகு உண்மை வெளிவரும் என்று நான் நம்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (15/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

19 mins ago

“பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை”..மருத்துவர்களுடன் போராடிய பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…

1 hour ago

“வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப்”…வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற ஜோ பைடன்!

அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்-விஜயாவிடம் மன்னிப்பு கேட்கும் சத்யா..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம்  உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …

2 hours ago

தூத்துக்குடி : பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.…

3 hours ago

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…

4 hours ago