சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனைக்கு நடத்த வேண்டு என்ற கோரிக்கை நிராகரிப்பு.
உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் 5 இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்துப் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதன்பின், ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் போன்ற உருவம் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியானது.
கள ஆய்விற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றமே இதுகுறித்து முடிவு செய்ய உத்தரவிட்டுருந்தது. இந்த சமயத்தில் சிவலிங்கத்தின் வயதை கண்டறிய கார்பன் சோதனை முறைக்கு உத்தரவிடகோரி இந்து தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் 5 இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது வாரணாசி மாவட்ட நீதிமன்றம். கார்பன் சோதனை நடத்த வேண்டும் என்ற இந்து தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
5 பெண்களில் ஒருவர் மட்டும் கார்பன் சோதனை செய்தால் சிவலிங்கம் போன்ற உருவம் உடைக்கப்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியும் சர்ப சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்து தரப்பின் கோரிக்கையை நிராகரித்து 5 இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது வாரணாசி நீதிமன்றம்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…