சுகாதாரத் துறையில் அதிக கவனம் செலுத்தியது மகிழ்ச்சி – பிரதமர் மோடி
ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் தாக்கல் என்பது வாய்ப்புகளின் பட்ஜெட்டாகும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் என்பது பொருளாதாரத்தை உருவாக்குவதையும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சுகாதாரத்துறையில் அதிக கவனம் செலுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் வேலைவாய்ப்பு உருவாக்கும் ஊக்கமும் கொண்டுள்ளது. ஆத்மநிர்பார் பாரத் பட்ஜெட் தாக்கல் வாய்ப்புகளின் பட்ஜெட்டாகும்.
இது பெரிய அளவிலான துறைகளுக்கு மேலும் வளர்ச்சியை தரும். குறிப்பாக எளிதான வாழ்க்கை, தனிநபர்கள், முதலீட்டாளர்கள், தொழில் மற்றும் உள்கட்டமைப்புக்கு பல சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கான சாதகமானது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் என்று தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடும், கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#AatmanirbharBharatKaBudget is a budget of opportunities, which will further growth in a wide range of sectors. This is a Budget that will further ‘Ease of Living’ and bring many positive changes for individuals, investors, industry and infrastructure. https://t.co/0AkbvFUsbw
— Narendra Modi (@narendramodi) February 1, 2021