மேற்கு வங்க மக்கள் திரிணாமுல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வாய்ப்பளித்தீர்கள். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மேற்குவங்கம் வந்தடைந்தார். கோல்கட்டாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா, திரிணாமுல் ஆட்சி முடிந்து, பாஜக ஆட்சிக்கு வரும் என்றும், 200-க்கும் அதிகமான தொகுதிகளை வென்று ஆட்சியில் அமர்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மேற்கு வங்க மக்கள் திரிணாமுல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வாய்ப்பளித்தீர்கள். எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள். வாய்ப்பு கொடுத்தால், வங்கத்தை தங்கமாக மாற்றுவோம் என்றும், மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை தடுத்து, எல்லைகளை பாதுகாப்பானதாக மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
தற்போது பாஜக மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நம்புகிறார்கள். மம்தா பானர்ஜியை 2010-ல் நம்பினார்கள். ஆனால், தற்போது அவர் மீது கோபத்தில் உள்ளதாகவும், கொரோனா மற்றும் வெள்ள நிவாரண போன்றவற்றில் கூட ஊழல் செய்வதற்கு, திரிணாமுல் அரசு வெட்கப்படுவதில்லை என்றும்கூறியுள்ளார். மேலும், மம்தா பானர்ஜி வாக்கு நடத்துவதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 100 பாஜக கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…