டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊரான குஜராத்திற்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சென்றுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு உள்ள ஆம் ஆத்மி கட்சி பெயரிடப்பட்ட சாலை கண்காட்சியில் பங்கேற்றுள்ளார். அதன்பின்பு தெருவோரங்களில் இருந்த மக்களிடம் உரையாற்றியுள்ளார்.
அப்போது பேசிய கெஜ்ரிவால், குஜராத்தில் 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. நான் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. பாஜக மற்றும் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்பதும் எனது நோக்கமல்ல.
குஜராத்தையும், குஜராத் மக்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். குஜராத்தில் ஊழல் முடிவுக்கு வர வேண்டுமானால் ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முறை பிடிக்கவில்லை என்றால் அடுத்த முறை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் ஒருமுறை ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு கொடுங்கள், நிச்சயம் மற்ற கட்சிகளை எல்லாம் மறந்து விடுவீர்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…