புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குக – முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதுடன் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் மத்திய உள்துறையை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென்னிந்திய மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநில முதல்வர்கள், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பங்கேற்கின்றனர்.
முன்னதாக நேற்று இரவு அமித்ஷாவை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்த நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதுடன் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிலான தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.