“பிளாஸ்டிக் கொடுத்து தங்கம் பெறுங்கள்”; காஷ்மீரில் சூப்பர் அறிவிப்பு.!
காஷ்மீரில் உள்ள சதிவாரா என்ற கிராமத்தில், ‘பிளாஸ்டிக் கொடுத்து தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற திட்டம் அறிமுகம்.
தெற்கு காஷ்மீரின் சதிவாரா என்ற கிராம பஞ்சாயத்து, “பிளாஸ்டிக் கொடுத்து தங்கம் பெறுங்கள்” எனும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத ஒரு தனித்துவமான மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் முயற்சியில், இந்த புதிய திட்டத்தை சதிவாரா கிராம பஞ்சாயத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஒருவர் 20 குவிண்டால்(2000 kg) பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால், பஞ்சாயத்து அவருக்கு தங்க நாணயம் வழங்கும். திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 நாட்களுக்குள், முழு கிராமமும் பிளாஸ்டிக் இல்லாததாக அறிவிக்கப்பட்டது. திட்டம் மிகவும் பிரபலமடைந்து, அனைவராலும் பாராட்டப்பட்டது மற்றும் பிற பஞ்சாயத்துகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் சதிவாரா கிராமம், அனைத்திற்கும் முன்மாதிரியாக மாறியுள்ளது. மேலும் இதே கருத்தை யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பிரதிபலிக்க அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.