நாடு முழுவதும் கொரோனா தொற்றானது அதிகரித்துவரும் நிலையில்,மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தினை இலவசமாக வழங்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையானது நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வருகிறது.இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி,கொரோனா தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசியின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன.
அதன்படி,கோவிஷீல்டு தடுப்பூசி விலையானது தற்போது விற்கப்படும் விலையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,கேரள முதல்வர் பினராயி விஜயன்,பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அக்கடிதத்தில்,கொரோனா தடுப்பூசி மொத்த உற்பத்தியில் 50% உற்பத்தியை மத்திய அரசுக்கும்,50% உற்பத்தியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்குமாறும் விதிக்கப்பட்டுள்ள புதிய விதியை நீக்க வேண்டும் என்றும்,
கொரோனா தடுப்பூசிகள் முழுவதையும் மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…