காதலை எதிர்த்த காரணத்தால் காதலியின் பாட்டி மற்றும் சகோதரனை குத்தி கொலை செய்து விட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் மோமின்புராவில் வசிக்கும் 22வயதான மொயின் கான் கடந்தாண்டு நவம்பரில் குஞ்சன் என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் வழியாக சந்தித்துள்ளார் . அதனையடுத்து கானை குஞ்சன் தனது குடும்பத்தினருக்கு நண்பர் என்று கூறி அறிமுகப்படுத்தியுள்ளார் . அதனையடுத்து சில நாட்களில் இருவரும் காதல் செய்வதை தெரிந்து கொண்டு குஞ்சன் குடும்பத்தினர் மொபைலை பறித்து விட்டு குஞ்சனை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் .
இதனை அறிந்த மொயின் கான் வியாழக்கிழமை அன்று பிற்பகல் ஹஜரிபாஹாட்டில் உள்ள காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார் .அங்கு காதலியின் பாட்டி பிரமிளா மரோதி துர்வே(70) மற்றும் தம்பி யஷ் (10) ஆகியோரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார் .அதன் பின்னர் அங்கிருந்து தப்பி சென்று மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குத்து கொண்ட பாட்டி மற்றும் சகோதரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்ததாகவும் ,ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கானின் உடல் மங்காப்பூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து இந்திய தண்டனைச் சட்டம் 302(கொலை)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…