ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாகுர் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய இருபது வயது கொண்ட பெண் ஒருவர், அப்பகுதியிலேயே வசிக்கும் ஒரு நபரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளியில் சுற்றுவது, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணிற்கு அவரது காதலன் ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காதலனுடன் கால்பந்து போட்டியை காண வெளியே சென்ற பெண், அதன் பின் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எனவே அவரது உறவினர்கள் பெண்ணை தேட ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், அந்த பெண்ணின் உடல் திங்கள்கிழமை காலை ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் மகேஷ்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பெண்ணின் காதலன் யாரென்று தேடி போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன் பின் நடத்திய விசாரணையில், அவர் தனது காதலிக்கு வாங்கிக்கொடுத்த ஸ்மார்ட் போனை திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்ததால் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தற்பொழுது குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் ஸ்மார்ட் போனை திரும்ப கேட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…