கல்லூரியில் "ராம்ப் வாக்" சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்..! சோகத்தில் மூழ்கிய சக மாணவர்கள்..!
பெங்களூரில் உள்ள பீன்யா பகுதியில் ஒரு தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த தனியார் கல்லூரியில் ஷாலினி என்ற மாணவி எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த கல்லூரியில் சமீபத்தில் ஃப்ரெஷர்ஸ் டே நிகழ்ச்சிக்காக மாணவிகள் தயாராகின.
அப்போது ஷாலினி என்ற மாணவி தன் நண்பர்களுடன் ராம்ப் வாக் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.இதையடுத்து திடீரென பயிற்சியின் போது ஷாலினி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரது தோழிகள் அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஷாலினி எழுப்பினர்.
ஆனால் ஷாலினி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார். உடனடியாக ஷாலினியை அவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் ஷாலினி பரிசோதனை செய்து பார்த்து ஷாலினி இறந்து விட்டதாக கூறினர்.
தகவலறிந்து கல்லூரிக்கு சென்ற போலீசார் அங்கு உள்ள மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து காவல் துணை ஆணையர் கூறுகையில் , ஃப்ரெஷர்ஸ் டே நிகழ்ச்சிக்காக மாணவ ,மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தான் அந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தோம்.
அதில் மேடைக்கு அருகில் இருந்தவர்கள் தங்களுடைய சுற்றுவரும் போது அனைவரும் ராம்ப் வாக்கில் ஈடுபட்டுள்ளன. அந்த நேரத்தில் ஷாலினி காண சுற்று வந்தபோது ஷாலினி ராம்ப் வாக் செய்துள்ளார். அப்போது திடீரென மேடையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.
நிகழ்ச்சியின் பயிற்சியின் போது மாணவி ஷாலினி இறந்த சம்பவம் அங்கு உள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.