இந்தியாவில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து எடுத்துக் கொண்டு வருகின்றன.ஆனாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து தான் இருக்கிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச கான்பூரில் உள்ள ஒரு பள்ளி சிறுமிகளை சிலர் கிண்டல் செய்ததற்காக புகார் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் ஒரு பெண் கான்ஸ்டபிள் ஒருவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து பள்ளிக்கு வந்த சிறுமிகளை சிலர் கிண்டல் செய்வதை பார்த்து உள்ளார். கிண்டல் செய்தவர்களை பிடிக்க முயன்றபோது ஒரு இளைஞரை மட்டும் சிக்கினார்.சிக்கிய இளைஞரை பெண் கான்ஸ்டபிள் தனது காலணிகளால் அடித்து உள்ளார்.
பெண் கான்ஸ்டபிள் தனது காலணிகளால் அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், கிண்டல் செய்த இளைஞரை 20 தடவைகளுக்கு மேல் காலணிகளால் அடித்து உள்ளார். அப்போது பெண் கான்ஸ்டபிள் “உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா..? உங்கள் வீட்டில் உனக்கு அம்மா மற்றும் சகோதரி இல்லையா? என கேட்டுக்கொண்ட காலணிகளால் அடித்தார். இளைஞரை பிடித்து அடித்த அந்த பெண் காவலருக்கு பலர் பாராட்டி வருகின்றனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…